தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் காணொளியாக வெளியிட்டது ‘கோமாளி’ படத்தின் படக்குழு.
அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது “கோமாளி” திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது எழுந்த சர்ச்சையின் காரணமாக சில காட்சிகள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தில் தனிக்கைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மாற்றங்கள் அனைத்தையும் காணொளியாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.