Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொஞ்சம் கூட பயமில்லாமல்….! ”பிரிச்சு மேஞ்சிட்டாரு… புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல் …!!

முதல் போட்டியில் , பஞ்சாப் அணி வெற்றி பெற்றதற்காக ,அணியின் வீரர்களை  பாராட்டி ,  அணியின் கேப்டனான  கேஎல் ராகுல் பேசியுள்ளார் .

நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் , ராஜஸ்தானை  வீழ்த்தி வெற்றி பெற்றது .இந்த போட்டியில் வெற்றி பெற்றதை, பற்றி அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பேசும்போது, எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு எப்போதும் பலத்த நம்பிக்கை இருக்கிறது.

நேற்று நடந்த போட்டியில் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருவருமே வெற்றிக்கு சமமான பங்கினை அளித்துள்ளனர். இருவருமே கிடைத்த நேரத்தில் தங்களுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். குறிப்பாக நேற்று நடந்த முதல் இன்னிங்சில் களமிறங்கிய தீபக் ஹூடா, சிறிதும் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது போன்றே கிறிஸ் கெயில் பயமின்றி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த சீசனின் முதல் போட்டியிலேயே, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வெற்றியை  இனி நடக்கவிருக்கும்  போட்டிகளிலும் கொண்டு செல்ல விரும்புவதாகவும், கேப்டன் கே எல் ராகுல் கூறினார். பஞ்சாப் அணி வெற்றி பெற்றதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |