சென்னையில் 90 மின்சார ரயில் சேவைகள் நாளை அறிமுக படுத்தபடவுள்ளதால் மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 500 ஆக உயரப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக முதலில் இயக்கப்பட்டது. முதல் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்பு அது 150 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் 320 மின்சார ரயில் சேவையை அதிகரித்து நேர கட்டுப்பாடுகளை விதித்தது. பெண்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே 410 மின்சார ரயில்களை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் குறிப்பிட்ட நேரங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் , மின்சார ரயில் சேவையை, தெற்கு ரயில்வே மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் நாளை 90 மின்சார ரயில் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் 80% மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.