Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனாங்க…? வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கூழ் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் கூழ் தயாரித்து ராஜேந்திரன் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து காவேரிப்பட்டணம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் அதிகாலை 6 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர்.

அதன் பின் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டையால் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் ராஜேந்திரனை கொலை செய்த மர்ம நபர்களின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |