Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதை வாடிக்கையாக வைத்திருந்த ராஜேஷ், ஏப்ரல் மாதம் குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

குளிர்பானம் குடித்த நினைவிழந்த சிறுமியை ராஜேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். ராஜேஷ் அந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து ராஜேசை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |