Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கூலி தொகையை தா” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாதனூர் பகுதியில் ஜீவானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். பள்ளத்தாதனூர் இந்திரா நகர் காலனியில் கண்மணி என்பவர் வசித்து வருகின்றார். இதில் கண்மணி கூலி தொழிலாளியாக இருக்கின்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி கண்மணி, ஜீவானந்தத்தை சந்தித்து அவருடைய தோட்டத்தில் வேலை செய்ததற்கான கூலி தொகையை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து சம்பவம் அன்று மாலை வேளையில் ஜீவானந்தன் மற்றும் கண்மணி ஆகிய இருவரும் பேளூர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடிப்பகுதியிலிருந்து மது அருந்தினர்.

அப்போது கண்மணியின் தலையில் ஜீவானந்தன் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ஜீவானந்தத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் தொழிலாளியை கொலை செய்த குற்றத்திற்காக ஜீவானந்தத்திற்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |