Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அந்த தள ஓட மாட்டல….? கூலி தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

முகப்பு ஓடுகளை மாட்டாததால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் வீட்டிற்கு பன்னீர்செல்வம் ஓடுகளை மாட்டி கொடுத்துள்ளார். இதில் பன்னீர் செல்வம் வீட்டின் முகப்பு ஓட்டை மாட்டாததால் இவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் ஆத்திரம் அடைந்த லோகநாதன் பன்னீர்செல்வத்தை கம்பால் அடித்து உதைத்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வீட்டு உரிமையாளரான லோகநாதன் தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிவகங்கை காவல்துறையினர் தலைமறைவான லோகநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |