Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இருதரப்பினர் வாக்குவாதம்”…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ஈரோட்டில் பயங்கரம்….!!!

கூலி தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி அண்ணாமலை வசித்து வந்தார். இதனிடையில் அண்ணாமலை மற்றும்  அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து உறவினர் ஒருவர் அரிவாளால் அண்ணாமலையை பின்பகுதியில் தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அண்ணாமலை வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் நீண்ட நேரமாகியும் அண்ணாமலை எழும்பாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது அண்ணாமலை இறந்து கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையுடன் தகராறில் ஈடுபட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |