கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு ஆட்டோ டிரைவர்களிடம் நண்பர் ஆகிவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் பகுதியில் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு சுற்றித் திரிந்தது. இந்த குரங்கானது ஆட்டோ டிரைவர்களிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் அரவணைப்பில் குரங்கு இருந்து வந்தது. அது டிரைவர்களிடம் பழங்களை வாங்கி சாப்பிடுவதும் அவர்களிடம் நண்பனைப் போலவும் பழகி வந்தது. மேலும் அந்த குரங்கு ஆட்டோ டிரைவர்களின் மடியில் அமர்ந்து கொஞ்சுவதையும் படத்தில் பார்க்க முடிகிறது.