பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று போலாந்திற்கு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போலந்தை ஆளும் வலதுசாரி சட்டம் மற்றும் நீதி அரசியல் கட்சி அறிமுகப்படுத்திய நீதி சீர்திருத்தங்கள் தொடர்பாக போலந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பாவில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்ற யூகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை போலந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பானது, சில ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தக் கட்டுரைகள் அந்நாட்டு அரசியலமைப்பில் பொருந்தாது மற்றும் அதன் நீதித்துறையில் தலையிடுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை “தங்கள் திறன்களின் எல்லைக்கு அப்பால் செல்லக்கூடாது” என்று எச்சரித்தன.
இந்த சூழலில், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-யிவ்ஸ் லே ட்ரியன் மற்றும் அவருடன் ஜெர்மன் பிரதமர் ஹெய்கோ மாஸ் ஆகியோர் போலந்து தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து இரண்டு கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினராக நாங்கள் பொதுவான மதிப்புகள் மற்றும் விதிகளை முழுமையாகவும் நிபந்தனையின்றி கடைபிடிக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த விதிமுறைகளையும் மதிப்புகளையும் மதிக்க வேண்டியது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள போலந்தின் பொறுப்பாகும். இது வெறுமனே தார்மீக அர்ப்பணிப்பு அல்ல. இது சட்டப்பூர்வமான உறுதிப்பாடும் ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது.