தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் தகுதி இல்லாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பொது நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் குறித்தும், தகுதி பெறாதது குறித்தும், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதுபற்றிய அறிவிப்பு அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி பெறாத இனங்களுக்கான நிபந்தனைகள் இதோ.
1 பவுனிலிருந்து 5 பவுனுக்கு மிகாமல் நகையின் பெயரில் பொது நகை கடன் பெற்று மார்ச் மாதம் 31-ஆம் தேதி 2021-ஆண்டு அன்று கடன் நிலுவையாக இருந்து அரசாணை வெளியிடப்படும் நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கடன் தொகை முழுவதும் திரும்ப செலுத்தப்பட்ட கடன்கள்.
ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒரே நபர் தமிழகத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடைகள் மூலம் 5 பவுனுக்கு மேற்பட்ட மொத்த எடை 40 கிராமுக்கு மேற்பட்ட நகை அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகை கடன்கள் மற்றும் அத்தகைய நபர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள்.
குடும்ப அட்டை எண்ணின் அடிப்படையில் ஒரே நபரோ அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களோ தமிழகத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக் கடைகள் மூலம் 5 பவுன் அதிகமாக தங்க நகை அடமானம் வைத்து பெறப்பட்ட அனைத்து கடன்கள்.
மார்ச் மாதம் 31-ஆம் தேதி 2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழங்கப்பட்ட நகை கடன்கள்.
2020 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. பயன் பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகை கடன்கள்.
எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற நகை கடன்கள்.
வரியோரிலும் வறியோர்க்கு வழங்கப்படும் குடும்ப அட்டைதாரர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடைகள் மூலம் மொத்த எடை 40 கிராம் கூடுதலாக நகைகளை ஈடாக வைத்து கடன் பெறுபவர்கள்.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அரசுத்துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையிலோ அல்லது காலமுறை அடிப்படையிலோ அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தவிர ஆகியோர் பெற்ற நகைகள் அரசு ஊழியர்கள் என்பவர்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் குறிக்கும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இவை பொருந்தும்.
கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாக குழுவினர் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகை கடன்கள்.
சங்க அளவில் நகை கடன் வழங்க நிதி ஆதாரம் ஏதும் இல்லாமலும், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட காசுகடனிலிருந்து தொகை ஏதும், பெறப்படும் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் பட்டுவாடா செய்யாமல் உறுப்பினர்களும் சேமிப்பு கணக்கில் வரவு வைத்து பணம் பட்டுவாடா செய்யாமல் வழங்கப்பட்ட நகை கடன்கள்.
சங்க அளவில் நகைக் கடன் வழங்க நிதி ஆதாரம் எதுவும் இல்லாமல் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து அனுமதி வழங்கப்பட்ட காசு கடனிலிருந்து தொகை ஏதும் பெறபடாமலும் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா செய்யாமலும், நகைக்கடன் அனுமதிக்கப்பட்டு அந்த தொகையை சங்கத்தின் இட்டுவைப்புகளாக முதலீடு செய்யப்பட்ட நகை கடன்ககடன்கள்.
நகைக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் எடை, தரம், தூய்மை குறைவு, அளவு, தரம் குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அந்த நகைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகைக்கும், அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியில் இருந்து நீக்க வேண்டும்.
கடன் வழங்கப்பட்ட தேதியில் ஒரு கிராம் சந்தை மதிப்பில் அனுமதிக்கப்பட வேண்டிய 75% தொகைக்கு உள்பட்ட நகை கடன் தொகை மட்டுமே தள்ளுபடி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவற்றில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் சரக அளவிலான சிறப்பு குறைதீர்வு குழு அதனை ஆராய்ந்து மாவட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் மாவட்ட குழு இது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம்.
நகைகளை இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகை கடன்கள்.
சுய விருப்பத்தின் பேரில் நகை கடன் தள்ளுபடி பெற விருப்பமில்லாதவர்கள் படிவம் மூன்றில் உறுதிமொழி சான்று பெற வேண்டும்.
தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் பிற மாநிலங்களில் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
ஆதார் அட்டையில் தமிழக முகவரி இல்லாமல் பிற மாநிலங்களில் முகவரி கொண்ட ஆதார் அட்டைகள் இருந்தால் அவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.