Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சர்க்கரை ஆலை நியமன முறைகேட்டை கண்டித்து போராட்டம்…!!

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் படாலும் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மதுராந்தகம் உத்திரமேரூர், திருப்பூரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிக்கு கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் முரளி மோகன் என்பவரை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் முன்னிலையில் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது இந்த பதவிக்கான நியமன தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முரளி மோகனிடம் வேட்புமனு தேர்வு தேர்தல் அலுவலர் பெற மறுத்துவிட்டார். ஏற்கனவே இப்பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் மட்டுமே உள்ளதாகவும் கூறி அலுவலக வாயிலில் அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து மாநில விவசாய அணி தலைவர் முரளி மோகன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணியினர் 10க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு ஒன்றிய வாயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |