தாளவாடி மலைப் பகுதியில் காட்டு பன்றி மற்றும் யானைகளால் கரும்பு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் வனவிலக்குகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தலமலை, கோடி புரம், தொட்டபுரம், முதியநூர், இக்களுர், சிக்கலி, நெய்தாராபுரம், கோடம்புளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
தற்பொழுது சில பகுதிகளில் கரும்பு வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் மகசூல் கிடைக்கும். ஆனால் பன்றிகள் மட்டும் காட்டு யானைகள் தொந்தரவால் சுமார் 30 முதல் 40 டன் கரும்பு மட்டுமே வெட்டப்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.