Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோப்புகளை கோட்டாட்சியர் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ….!!

மதுரையில் கிராம பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாட்சியர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கூட்டியார்க்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிகள் கிரஸ்ஸர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் எவ்வித சமரசம் எட்டப்படாத நிலையில் கோட்டாட்சியர் சௌந்தர்யா மீது கிராம பிரதிநிதி ஒருவர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக நேரடியாகவே குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரம் கொண்ட கோட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அங்கு இருந்த கோப்புகளை கோட்டாட்சியர் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கல்குவாரியை நிரந்தரமாக மூடும் வரை கிராம மக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என கிராம பிரதிநிதிகள் கூறி சென்றனர்.

Categories

Tech |