இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். குஜராத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பிரவீன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை பிரவீன்குமார் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரவீன்குமாருக்கு வேலுசாமி என்பவரது மகனான தங்கதுரை என்பவர் நெருங்கிய நண்பர் ஆவார்.
இதனையடுத்து இருவரும் இருசக்கர வாகனத்தில் பாளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு திரும்பியபோது எதிரே வந்த லாரியானது இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.