லாரி மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அறிவழகன் என்பவர் லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அறிவழகன் லாரி பழுதானதால் சாலை ஓரம் அதனை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த வேன்
எதிர்பாராதவிதமாக லாரி மீது பலமாக மோதியது. இதில் வேன் டிரைவர் வினோத் மற்றும் கிளீனர் ரவிச்சந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து உயிருக்கு போராடிய ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த வினோத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.