Categories
உலக செய்திகள்

கொரோனா : உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் முக்கிய கோரிக்கை!

உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் நாளுக்குநாள்  ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரையில் மருந்து இந்நோய்க்கு கண்டுபிடிக்கவில்லை.

இதனை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றன. குறிப்பாக இந்த வைரஸை கட்டுப்படுத்த லாக் டவுன் என்ற முழு ஊரடங்கை பல நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், (Tedros Adhanom Ghebreyesus) கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதனை ஒவ்வொரு நாட்டின் அரசும் உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

மேலும் குறிப்பாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை எந்தவித சுணக்கமும் இன்றி சிகிச்சைப் பெரும் நோயாளிகளுக்கு சென்று சேர வேண்டும். அவசர காலத்தில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதை அரசு முன்கூட்டியே கணித்து அதற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |