இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எலவம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை ஜம்புலிங்கம் ஆவார். இந்நிலையில் சுப்பிரமணி தனது தந்தை ஜம்புலிங்கம் உடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நத்தக்காடு பகுதியில் வசிக்கும் கந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இந்நிலையில் கந்தனின் இருசக்கர வாகனமானது சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜம்புலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.