ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதால், எளிய மக்கள் திறந்தவெளி கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.
அடிப்படைத் தேவையான கழிப்பிட வசதியும் போதுமான அளவிற்கு இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.