Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் செய்ய வேண்டும்…. சாலை பணியாளர்களின் கோரிக்கைகள்…. கலெக்டருக்கு மனு….!!

தொழிற்சாலைதுறை சாலை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான செல்லசாமி என்பவரின் தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களை திறன் மிகுஇல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் 1900 ரூபாயை புதிய ஊதியமாக நிர்ணயம் செய்து நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து விபத்து படி, சைக்கிள் படி, சீருடை, சலவை படி போன்றவைகளை வழங்குமாறும் மற்றும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாலைப் பணியாளர்களின் வீட்டு வாடகைப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். பிறகு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். அதன்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் சிலரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றுயுள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுவினை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியாவை சந்தித்து பணியாளர்கள் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |