Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்க மேலாளர் தேவகி, ஒன்றிய துணைச் செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசியுள்ளார்.

அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்றும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை பல்லாயிரம் கோடியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைத்து 50 ரூபாய்க்கு பெட்ரோலும், 40 ரூபாய்க்கு டீசலும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரங்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் இளமதியம், மாவட்ட நிர்வாகி ராமன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயக்குமார், பாஸ்கரன், வீரமணி போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று பொறையாறு கடை தெருவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வேதநாயகம் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையை கூறியுள்ளார். அப்போது தரங்கம்பாடி பேரூர் செயலாளர் பாக்கியராஜ் போன்ற கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எனவே செம்பனார்கோவில் கடைத்தெருவில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், செங்கல்பட்டு மருந்து ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Categories

Tech |