கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணைத் தலைவர் ம. சிட்டி பாபு தலைமையில், எஸ்.சி பிரிவு தலைவர் பிரபு, நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அரசு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை தகுதிவாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்த எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பி.சி மக்களுக்கு டெல்லி அம்பேத்கர் பவுண்டேஷன் வழங்கும் 2.50 ஆயிரம் ரூபாய் நிதி விரைவாக வழங்க மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் மாவட்ட தாலுகா மாடப்பள்ளி காலனியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரபு என்பவர் மற்றும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏரிக்குப்பம் ராஜாவின் மகன் நித்தியகுமார் என்பவர் பணம் மோசடி செய்து தலைமறைவாக இருப்பதால் அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைப்போன்று வேலூர் முன்னாள் ராணுவ வீரர் நரேஷ்குமார் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் நாட்டறம்பள்ளியை சேர்ந்த சின்னத்தம்பி கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட அவரை பி.சி.ஆர். சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இவ்வாறு மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.