கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாலையோர வியாபாரிகள் முனையம் சார்பில் 2014 மத்திய சட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும்,பயோமெட்டிக் அடையாள அட்டை வழங்க கோரியும், வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே மீண்டும் அனுமதி வழங்க கோரியும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தாலுகா அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில், துணை அமைப்பாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
இதனையடுத்து போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் எஸ்.ஆர். தேவதாஸ் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அதன்பின் போராட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக் கடனை வழங்குவதையும், கந்துவட்டி கொடுமைகளை தடுக்கக் கோரியும் உள்ளாட்சி அமைப்பு மூலம் டெண்டர் விட்டு வசூலிப்பதை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் ரபிக்கான், செங்கனி இர்பான் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் அமர்குஷ்வாஹாவிடம் மனு கொடுத்துள்ளனர்.