Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

திருவாரூரில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தல், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஊதிய நிறுத்தம் உள்ளிட்ட பயன்களை வழங்கவேண்டும், தற்காலிக ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலையில், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். மேலும் இதில் நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி, மகாலிங்கம், விஜயன், சிவகுமார் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் இறுதியில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.

Categories

Tech |