சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பநல நிதி 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
அதன்பின் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், பொருளாளர் சுப்பிரமணியன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் போன்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிதாசன் போராட்டத்தை முடித்து வைத்து, இறுதியில் ஒன்றிய செயலாளர் கணேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.