தமிழகத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கனடாவிலுள்ள விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் அனுமதி கிடைத்துள்ள நிலையில், அவர் தமிழக அரசின் உதவியை கோரியுள்ளார்.
தமிழகத்திலுள்ள தேனி மாவட்டத்தில் உதயகீர்த்திகா என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய எண்ணம் முழுவதும் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதிலுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக உதய கீர்த்திகா கனடாவிலிருக்கும் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க விண்ணப்பித்துள்ளார்.
இவருடைய விண்ணப்பத்தை கனடாவின் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையம் ஏற்றுள்ளது. ஆனால் இவர் கனடாவிற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டுமமெனில் ரூபாய் 50 லட்சம் வரை செலவாகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் உதயகீர்த்திகா தமிழக அரசு தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கு தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.