Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் தொற்று…. தலைமை ஆசிரியருக்கு நடந்த துயரம்…. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சி….!!

வாணியம்பாடியில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜோஸ்பின் வசந்த மல்லிகா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த, ஜோஸ்பின் வசந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் வாணியம்பாடி பகுதியில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று கிரிசமுத்திரம் பகுதியிலும்  ஒருவர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித்திரிவதால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |