தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலை சேர்ந்த நபரையடுத்து அந்நாட்டின் பிரதமர் “நம் நாடு அவசர காலத்தின் நுனியில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தரையிறங்கும் விமான சேவைக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவையை கூட்டிய இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தாலி பென்னேட் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இஸ்ரேலில் தற்போது அவசர கால நிலையை பிரகடனம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.