Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. கவர்னரின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அம்மாவட்டத்தின் கவர்னர் அங்கு பேரழிவு அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் ஒரே நாளில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா சுமார் 6,295 பேருக்கு உறுதியாகியுள்ளது. அதோடு மட்டுமின்றி ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் நியூயார்க் மாவட்டத்தின் கவர்னர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நியூயார்க் மாவட்டத்தில் கொரோனா மென்மேலும் பரவுவதை தடுக்கும் பொருட்டு அங்கு பேரழிவு அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |