தென்னாப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா உலக நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தென் ஆப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி மேல்குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.