தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலையும் 10 சதவீத விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அமெரிக்க பங்கு சந்தைகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தேக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.