Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா…. சோதனையில் வெளிவந்த உண்மை…. குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்….!!

தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை ஓமிக்ரான் வைரஸ் பாதித்ததையடுத்து அவரும், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை மரபணு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகையினால் சீனாவிலிருந்து இலங்கை திரும்பிய நபரும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |