உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றால் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அனைத்து நாடுகளிலும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,517 ஆக அதிகரித்துள்ளது. இதிலும் 43 பேருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் எதுவுமின்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.