நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியை சார்ந்தவர் முத்துகிருஷ்ணன்(45). இவர் சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மருத்துவர்கள் முத்துகிருஷ்ணனை கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தினார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் 8ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதையடுத்து அவருக்கு காய்ச்சல் அதிகரித்தது.
இதனிடையே முத்துகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்ததால், அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் . இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதாக உறவினர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.