வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 400 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மீதமிருக்கும் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வயது மூத்தோர், மூச்சுத்திணறல் போன்ற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பிற சிகிச்சைகளுக்காக பொது மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமான தகவல்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.