ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4,653 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனையடுத்து 18 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோய் தொற்றை தடுக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.