Categories
உலக செய்திகள்

என்ன…! டெல்டா வகை கொரோனா உறுதியா…? 460 விமானங்களுக்கு தடைவிதித்த சீனா…. சுகாதாரத்துறை இணை இயக்குனரின் முக்கிய தகவல்….!!

விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 460 விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இருப்பினும் சீனா கொரோனா தொற்றின் பரவலை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தெற்கு சீனாவிலிருக்கும் குவாங்சவ்வில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குவாங்சவ்வில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 6 பேரில் பெண் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பெண் விமானநிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதால் 460 விமானங்கள் திடீரென்று தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திலிருக்கும் உணவு விடுதிகளும், கடைகளும் மூடப்பட்டு அங்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார துறையின் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |