வயதானவர்கள் ஒரு டோஸ் பைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலே அது அவர்களை 60% கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கொரோனாக்கு எதிராக பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதன் விளைவாக சுமார் 310 பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் 10,412 பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த ஆய்வு காலத்தில் 310 பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருப்போரில் 67 சதவீதம் பேர் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியையும், 33 சதவீதம் பேர் பைசர் தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்த 2 கொரோனா தடுப்பூசிகளையும் ஆய்வில் பயன்படுத்தபட்டவர்கள் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு சுமார் 48 நாட்கள் கழித்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியினால் 68 சதவீதம் கொரோனா குறைந்துள்ளதாகவும், பைசர் தடுப்பூசிக்கு 65 சதவீதம் தொற்று குறைந்துள்ளதாகவும் பிரபல பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.