உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையிலுள்ள மிருகக்காட்சியிலிருக்கும் 11வயதாகும் சிங்கத்திற்கு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருக்கும் கொழும்புவில் தெஹிவாலா என்னும் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 11 வயதாகும் ஷீனா என்று அழைக்கப்படும் சிங்கம் ஒன்று உள்ளது. இந்த சிங்கத்திற்கு சில நாட்களாகவே சளித் தொந்தரவு இருந்து வந்துள்ளது.
இதனால் அதனை பராமரிக்கும் நபர்கள் சிங்கத்தினுடைய சளி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதனையடுத்து சளி மாதிரிகளினுடைய ஆய்வக சோதனையின் முடிவில் சிங்கத்திற்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.