Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் கிருமி நாசினி தெளித்தல்…. 50% பேர் மட்டும் அனுமதி…. பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 50% பேர் மட்டுமே பேருந்துகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இந்நிலையில் வேலூர் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் புறநகர், டவுன் பேருந்துகளில் 50% பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகும் போது கூடுதலாக பேருந்துகள் இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருப்பத்தூரில் இருந்து சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஆலங்காயம், கந்திலி, குரிசிலாப்பட்டு, நாட்டறம்பள்ளி போன்ற பகுதிகளுக்கு குறைவான நபர்களுடன் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றது. மேலும் நகராட்சி சார்பாக அரசு பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு பேருந்துகளில் அதிகம் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. இதனால் பயணிகள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடிய  நிலையில் காணப்பட்டது.

Categories

Tech |