மலேசியாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூன் 20ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது அந்நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
அதன்படி மலேசியா நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுபாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு, அது ஜூன் 28-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, கொரோனா கட்டுப்பாடுகள் மலேசியாவிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றால் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் கீழ் இருக்கவேண்டும் என்றுள்ளார். இதனையடுத்து தினந்தோறும் 10 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டால்தான் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றுள்ளார்.