யூரோ கால்பந்து போட்டி ஆரம்பமாகியதை தொடர்ந்து இங்கிலாந்தில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதனால் சுமார் 5 முதல் 8 வாரங்களுக்குள் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை அதிகமாக எதிர்கொள்ளும் நிலை நேரிடும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இங்கிலாந்தில் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பொது முடக்கம் போடுவதற்கு நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தரவுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனையும் இங்கிலாந்து தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். அதாவது யூரோ கால்பந்து போட்டி ஆரம்பமாகியதைத்தொடர்ந்து சுமார் 2 வாரங்களில் பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுள்ளார்.