மலேசிய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து கூட தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10,000 த்திற்கும் அதிகமாகவுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி மலேசிய நாடும் தங்களுடைய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது.
இருப்பினும் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 த்துக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் மலேசியாவில் கொரோனாவால் 17,045 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,438 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,994 ஆக அதிகரித்துள்ளது.