வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று 400- ஐ தாண்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றின் உச்சக்கட்டம் 600-ஐ தாண்டியுள்ளது. வேலூரில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் 50 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 2,500 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா தொற்றை தடுப்பதற்கான முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் தர வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.