அமெரிக்கா சுமார் 1 கோடி தடுப்பூசிகளை கொரோனா மிக வேகமாக பரவி வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விரைவில் வழங்கப்போவதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் 1 கோடி தடுப்பூசிகள் என தென்ஆப்பிரிக்காவிற்கு 56 லட்சம் மாடர்னா தடுப்பூசிகளும், நைஜீரியாவிற்கு 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.