ஜப்பானில் இதுவரை இல்லாத வகையில் தினசரி தொற்று பாதிப்பு 10,000 த்தை கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலையை பிறப்பித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறான சூழலில் ஜப்பானில் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் 10,000 த்தை தாண்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜப்பான் நாட்டின் அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டோக்கியோவை சுற்றியுள்ள 4 நகரங்களில் கொரோனா குறித்த அவசர கால நிலையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது.