பிரேசிலில் ஒரே நாளன்று புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா
உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வருகிறது.
இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்ம் இந்த தகவலை பிரேசில் நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பிரேசில் நாடு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2 ஆவது இடத்திலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.