Categories
உலக செய்திகள்

ஆசிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு…. வேகமாக பரவி வரும் கொரோனா…. தகவல் வெளியிட்ட கத்தார்….!!

இந்தியா உட்பட பல முக்கிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் சுகாதார அமைச்சகம் தங்கள் நாட்டினுள் நுழையும் 6 ஆசிய நாடுகளுக்கான கொரோனா குறித்த புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், நேபாளம் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து கத்தாருக்கு வரும் பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது.

மேலும் அவ்வாறு உட்படுத்தப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரியும் வரை பயணிகள் 2 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த 6 ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் கூட கத்தார் வந்தவுடன் சுமார் 10 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |