Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட சொத்தை பிரிச்சு கொடுத்திருங்க…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. மருத்துவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்….!!

கொரோனாவின் 2 ஆவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தனுஷின் ட்ரீம்ஸ் பட ஹீரோயின் அவருடைய மருத்துவருக்கு மின்னஞ்சல் செய்த தகவலை தற்போது பகிர்ந்துள்ளார்.

மிகவும் பிரபலமான நடிகரான தனுஷினுடைய ட்ரீம்ஸ் படத்தின் மூலம் பரூல் யாதவ் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்திற்கு பின்பு பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனாவின் 2 ஆவது அலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து 12 நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். மேலும் இவர் 3 ஆவது மாடியில் தன்னை தனிமையும் படுத்தியுள்ளார்.

இவ்வாறு தனிமையில் இருந்த அவர் தன்னுடைய நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டு தான் இதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்றும், நான் கட்டாயமாக இறந்துவிடுவேன் என்றும், தன்னுடைய சொத்துக்களை தனது சகோதரிகளுக்கு பகிர்ந்து கொடுத்து விடுங்கள் என்றும் அவருடைய மருத்துவர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இச்செய்தியை தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட அவர் பொது மக்களின் விழிப்புணர்வுக்காக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |