வேலூரில் ஒரே நேரத்தில் பத்து ஆம்புலன்ஸ் வருவதால் நோயாளிகள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தினசரி 10 ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பவர்கள் வருகின்றனர்.இந்நிலையில் அவர்கள் அவசர சிகிச்சை பெறுவதற்காக காத்திருக்கும் நிலையில், சில நோயாளிகள் ஆம்புலன்ஸில் உயிர் இழப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாததால் பல மணி நேரம் ஆகியும் நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறியபோது, ஒரே நேரத்தில் பத்து ஆம்புலன்ஸ் வருவதால் இது போன்ற பிரச்சனை நிலவுகின்றது.
ஆனால் படுக்கைகள் வசதிகள், மருத்துவர்கள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல் அதிகமாகும் வரை மருத்துவமனைக்கு வராமல் இருப்பதால், அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா அறிகுறி இருந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் சில பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாட்களுக்குப் பிறகு வருவதால் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.